• vilasalnews@gmail.com

யார் இந்த திமுக நிர்வாகி? கோவில்பட்டி தொகுதியின் அரசியலில் பேசுபொருளான இளைஞர்!

  • Share on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் விருப்பமான அளித்து வரும் நிலையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக நிர்வாகியான இளைஞர் ஒருவர் விருப்பமான அளித்துள்ள விவகாரம், தற்போது அத்தொகுதியில் அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.


இந்த நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.


அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, கழக அமைப்பு துணை செயலாளர் ஆஸ்மன், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபன் ஆகியோர் பெற்றுவருகின்றனர். 


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து திரண்டு விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்படுகிறது. 


கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகி குருராஜ் விருப்பமனு அளித்துள்ளார்.


முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரிடம் விருப்பமனு வழங்கி ஆசி பெற்றார்.


தற்போது, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரிடம் விருப்ப மனுவை வழங்கி ஆசிபெற்று விருப்பமனு தாக்கல் செய்திருக்கும் கோவில்பட்டி தொகுதி திமுக நிர்வாகி குருராஜ் யார் என்று தற்போது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருப்பது குறிப்பிடதக்கது.

  • Share on

அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் உடன் வைகோ இருந்திருந்தால் அவரின் தூக்குக்கயிற்றையே அறுத்தெறிந்திருப்பாரோ!

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது: போலீசாருக்கு கொலை மிரட்டல்!

  • Share on