தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சக்கம்மாள்புரம் கிராமத்தில், சுமார் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவருமான மார்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய அங்கன்வாடி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ரஞ்சித், விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர், புதுராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ் பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகப் பிரியா ராஜாராம், கிளைச் செயலாளர் முருகன், பாக டிஜிட்டல் ஏஜென்ட் சுப்பையா, கருத பாண்டி மாரிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.



