• vilasalnews@gmail.com

தாசில்தாரை கத்தி முனையில் மிரட்டி நகை பறிப்பு... தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி கைது!

  • Share on

தூத்துக்குடியை சேர்ந்த ஏ+ கேட்டகிரி ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை செம்மஞ்சேரி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால், கை எலும்பு முறிந்துள்ளது.


ரவுடி மகாராஜா, தாசில்தார் செல்லத்தை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து 25 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் தாசில்தாரின் புகாரின் பேரில் அவரை போலீஸார் தேடி வந்தனர்


அப்போது சோழிங்கநல்லூர் பகுதியில் வேறு ஒரு நபரிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட போது அவரை செம்மஞ்சேரி போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கால், கை எலும்பு முறிந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  • Share on

கல்வி கடன் வேண்டுமா? தேவையான ஆவணங்களுடன் பிப். 27-ல் தூத்துக்குடிக்கு வாங்க... கலெக்டர் தகவல்!

தூத்துக்குடி மேயர் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக கோரிக்கை... பின்னணி என்ன?

  • Share on