தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழக பெண்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.5,000 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
தூத்துக்குடியில் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடும் விதமாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, எதிர்க்கட்சிகளின் தடைகளைத் தாண்டி முதலமைச்சர் இந்தத் தொகையை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த முறை ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும் போது, மகளிர் உரிமைத் தொகை நிரந்தரமாக ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். இதுவரை இந்தத் திட்டத்தில் விடுபட்ட பெண்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை அணுகி தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியே தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




