• vilasalnews@gmail.com

ரேஷன் கார்டில் கைரேகை விழவில்லையா? - தூத்துக்குடி மக்களுக்காக இன்று சிறப்பு முகாம்!

  • Share on

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை மற்றும் விழித்திரை பதிவு (Biometric & IRIS) சரியாக விழாமல் அவதிப்படும் குடும்ப அட்டைதாரர்களுக்காக, தூத்துக்குடியில் இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பலருக்கு வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைகளில் உள்ள இயந்திரங்களில் கைரேகை சரியாகப் பதிவாவதில்லை. இதனால் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.


இந்த முகாமில், கைரேகை பதிவு செய்ய இயலாதவர்கள் தங்களுக்குப் பதிலாக, தங்கள் உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் ஒருவரை நியமிக்கலாம். தேர்வு செய்யப்படும் அந்த நபர், இனி உங்களுக்காகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்காக, சம்பந்தப்பட்ட நபர் தனது ஆதார் அட்டையுடன் முகாமிற்கு வர வேண்டும்.


இந்த முகாமானது இன்று ( 11.02.2026 ) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மெகா கோலப்போட்டி... நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாடு!

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை!

  • Share on