• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கடலில் மறைந்த 3 உயிர்கள்... கண்ணீரில் தவித்த குடும்பங்களுக்குக் கிடைத்த ஆறுதல்!

  • Share on

தூத்துக்குடி துறைமுக விபத்தில் உயிரிழந்த 3 கடலோடிகள் குடும்பங்களுக்கு நிலுவையில் இருந்த இன்சூரன்ஸ் தொகை ரூ.49.77 லட்சம் வழங்கப்பட்டது. 


தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி மிதவைக்கலன் விபத்தில் உயிரிழந்த மூன்று கடலோடிகளின் குடும்பங்களுக்கு, நிலுவையில் இருந்த இன்சூரன்ஸ் தொகை நேற்று (05-02-2026) கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது.


கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கம்பெனி நிர்வாகம் சார்பில் ரூ. 30 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள காப்பீட்டுத் தொகையான (Insurance Amount) ரூ. 50 லட்சத்தைப் பெற்றுத்தர பல்வேறு மீனவ அமைப்புகளும், மாலுமிகள் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.


தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த மூன்று கடலோடிகளின் குடும்பத்தினரிடம் ரூ.49,77,783-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த நஷ்டஈடு தொகை பெற்றுத்தர உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாண்டியபதி பரதவர் நலத் தலைமைச் சங்கம் தனது நன்றிகளைப் பதிவு செய்துள்ளது.  


இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் இன்னாசி விடுத்துள்ள அறிக்கையில்: "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க இறுதிவரை உடனிருந்த Snows Shipping உரிமையாளர் கிஷோர், சட்ட ஆலோசனைகள் வழங்கி களத்தில் நின்ற த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் ஆகியோருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும், இதற்காகக் குரல் கொடுத்த அனைத்து மீனவ மற்றும் மாலுமிகள் சங்கங்களுக்கும், பாண்டியபதி பரதவர் நலத் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 'ஒற்றுமையே பலம்' என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் அதிர்ச்சி: பாலம் அருகே ரத்தக் காயங்களுடன் வாலிபர் சடலம் மீட்பு!

ஆதனூர் கிராமத்தில் 35 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

  • Share on