• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பீச் ரோட்டில் நடந்தது என்ன? போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய 'அந்த' மூவர்!

  • Share on

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் நடமாடிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான தெற்கு பீச் ரோடு மற்றும் ரோச் பூங்கா பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, தென்பாகம் காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


ரோந்துப் பணியின் போது, ரோச் பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.


சோதனையின் போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதம் (அரிவாள்) கண்டறியப்பட்டது. அந்த இளைஞர்களிடமிருந்து அரிவாள், அவர்கள் பயன்படுத்திய பைக் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.


விசாரணையில் பிடிபட்டவர்கள் தூத்துக்குடி பூபாலராயர்புரம் டார்ஜன் (26) , தெற்கு ராஜாதெரு சலேத் (24), எஸ்.எஸ்.மாணிக்க புரம் அரவிந் (24) ஆகியோர்   என தெரியவந்தது.


இதனையடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றியதற்காக, தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்மூவரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


  • Share on

தூத்துக்குடி மாவட்ட மானாவாரி விவசாயிகளுக்கு ஜாக்பாட் - 100% மானியம் : ஆட்சியர் சொன்ன சூப்பர் ஸ்கீம்!

மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் ஆண்கள், பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு: மோசடி வலையில் விழாமல் தப்பிப்பது எப்படி?

  • Share on