• vilasalnews@gmail.com

கருகிய மிளகாய் செடிகளுடன் விவசாயிகள் கதறல்: விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

  • Share on

பருவமழை பொய்த்ததால் கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய இழப்பீடு கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிளகாய் முதன்மையான மானாவாரி பயிராகும். கடந்த சில மாதங்களாகப் போதிய மழையின்றி வறட்சி நிலவி வரும் சூழலில், பயிர்கள் வாடி வதங்கின. எஞ்சிய பயிர்களையும் செங்கால் நோய் மற்றும் வாடல் நோய் தாக்கி முற்றிலும் அழித்துவிட்டன.


விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களை உடனடியாக 'வறட்சி பாதித்த பகுதிகளாக' அறிவிக்க வேண்டும்.வேளாண் துறை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான வயல்களுக்கு நேரில் வந்து முறையான ஆய்வு நடத்த வேண்டும்.ஏக்கருக்கு ₹40,000 முதல் ₹50,000 வரை செலவு செய்துள்ள நிலையில், உரிய இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.


"ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறோம். இப்போது ஒரு பைசா கூட வருமானம் கிடைக்காமல் நடுத்தெருவிற்கு வந்துவிட்டோம்," என விவசாயிகள் கைகளில் கருகிய மிளகாய் செடிகளுடன் கண்ணீர் மல்கக் கோஷமிட்டது பார்ப்போரை உருக்குவதாக இருந்தது.


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் விவசாயிகள் அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாகவும்  விவசாயிகள் சங்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி ‘கிழக்கு’ தொகுதி மீனவர்களுக்கே: பரதகுல ஒருங்கிணைப்புக் குழு அதிரடி கோரிக்கை!

ரூ.11,040 வரை உதவித்தொகை: தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு முகாம்!

  • Share on