• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே சோகம்... தாய் மண்ணிற்கு உயிரைத் தந்த வீரன் : சக்கமாள்புரம் கிராமமே கண்ணீரில் மூழ்கியது!

  • Share on

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் மரணம் அவரது சொந்த கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சிவஞானபுரம் அருகே உள்ள சக்கமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்.  இவரது மகன் சிவா (31). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். 


இந்த நிலையில் இன்று ( 2.2.26 )  காலை பணியின் போது வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து, ராணுவ வீரர் சிவாவின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சக்கம்மாள்புரம் கிராமத்திற்கு  கொண்டு வரப்பட்டு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.


ராணுவ வீரர் சிவாவின் இறப்பு செய்தி அறிந்து, அவரை சொந்த ஊரான சக்கமாள்புரம் கிராம பொதுமக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


  • Share on

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மதிமுக மரியாதை

  • Share on