தூத்துக்குடியில் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தானர்.
தூத்துக்குடி மேல வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (23). இவர் மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இவர் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர் தாளமுத்துநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரிவாளை காட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளாராம். இதனையடுத்து தகவலறிந்த உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரவீன்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அவர் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்றாராம். இதையடுத்து பிரவீன் குமாரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




