• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை ( ஜன.25 ) இரவு முதல் இந்த பக்கம் செல்லும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க மக்களே!

  • Share on

இரட்டை ரயில் பாதை பணி காரணமாக தூத்துக்குடியில் 1ஆம் கேட் மூடப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக தூத்துக்குடி நகரில் முக்கியமான 1-ஆம் ரயில்வே கேட் 25-01-2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி முதல் 28-01-2026 (புதன்கிழமை) மாலை 6 மணி வரை அந்த ரயில்வே கேட் முழுமையாக மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தூத்துக்குடி - திருநெல்வேலி வழித்தடத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தற்காலிக மூடல் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ரயில்வே கேட்டின் வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படாது.


இதனால் அப்பகுதியில் தினசரி பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமங்களை தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக அவசர சேவைகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான மாற்றுப் பாதைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே, தற்காலிக சிரமங்களை பொதுமக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ரயில்வே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை... பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!

தூத்துக்குடியில் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது!

  • Share on