• vilasalnews@gmail.com

சென்னையில் முகாமிட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்!

  • Share on

சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், தொகுபி பங்கீடு உள்ளிட்டவற்றால் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. 


இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் பணி அதிமுகவில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது. 31 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டதில், மொத்தம் 10 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2187 மனுக்கள் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 7,988 பேர் தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தனர்.


இந்த நிலையில், அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார்.


இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று ( ஜன.24 ) நேர்காணல் நடத்துகிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்கள் பலரும் சென்னையில் முகாமிட்டு நேர்காணலில் கலந்து கொள்கின்றனர்.

  • Share on

டிடிவி தினகரனிடம் பலமுறை சொன்னோம்... போட்டுடைத்த கடம்பூா் மாணிக்கராஜா

திமுக Vs அதிமுக... மாணிக்கராஜா Vs கடம்பூர் ராஜூ... இனி ஓங்கும் கை யாருடையது?

  • Share on