• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம்... மாற்றியமைக்க திட்டமிடுகிறதா தலைமை?

  • Share on

தமிழகத்தின் மிக முக்கியமான துறைமுக நகரமான தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, தென் தமிழகத்தின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


வர்த்தகம், மீன்பிடித் தொழில் மற்றும் உப்பளத் தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது கௌரவப் பிரச்சினையாகவே அரசியல் கட்சிகளால் பார்க்கப்படுகிறது.


1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல்களைச் சந்தித்து வரும் தூத்துக்குடி தொகுதி, தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாகவும், பின்னர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெறும் களமாகவும் இருந்து வருகிறது.


1967-ல் முதல்முறையாக தி.மு.க இத்தொகுதியைக் கைப்பற்றியது. அதன் பிறகு அதிகபட்சமாக தி.மு.க 7 முறையும், அ.தி.மு.க 5 முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளன.


2018-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இத்தொகுதியின் அரசியல் போக்கையே மாற்றியது. இது கடந்த இரு தேர்தல்களில் அ.தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.


மேலும், தூத்துக்குடி தொகுதி எப்போதும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நிரந்தர ஆதரவை வழங்காமல், வேட்பாளரின் முகம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்தே தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. தற்போது தி.மு.க பலமாக இருந்தாலும், அது மாறுதலுக்கு உட்பட்டது தான் என்பதை தூத்துக்குடி தொகுதி நிருபிக்கும் என்பதே யதார்த்தம்.


அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில், திருச்செந்தூர் தொகுதி பாஜகவிற்கும், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுகவிற்கும் ஒதுக்கப்படக்கூடிய நிலை இருப்பதால், தூத்துக்குடி தொகுதியில் இம்முறை அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. ஆகவே, தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பலரும் மல்லுகட்டி வருகின்றனர். இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் மணி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகிய மூன்று பேரும் சம பலத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர்.


இதில், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் வேட்பாளர் கிறிஸ்துவ நாடார் சமூகத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற வேட்பாளர் தேர்வு மரபு பின்பற்றப்படுகிறது. ஆகவே, இந்த அடிப்படையில் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணியும் இருந்து வருகின்றனர்.


அதே வேளையில், அந்த வேட்பாளர் தேர்வு மரபை தகர்த்து, இந்து நாடார் சமூகத்தை சார்ந்த ஒருவரை நிறுத்துங்கள் நாங்கள் வெற்றி பெற வைக்கிறோம் என தொகுதி பாஜகவினர் ஒரு புறம் கங்கணம் கட்ட, எம்ஜிஆர், அம்மா வழியில் எடப்பாடியார் கைகாட்டும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர் வெல்வார் என்றும், தூத்துக்குடி தொகுதிக்கு அதிமுக நேரடி வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை புதுமுக வேட்பாளர் உறுதியாக வெல்வார் என்ற செண்டிமெண்ட் இருக்கிறது. ஆகவே புதுமுக வேட்பாளரே தூத்துக்குடி தொகுதிக்கு வேண்டும் என அதிமுகவினர் ஒரு பக்கம் விருப்பம் தெரிவிக்க, இந்த இரண்டு வரையறைக்கு  பொறுத்தமான ஆளாக முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகரே முன்னிலையில் நிற்கிறார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராட்சிகளின் ஒன்றான மீளவிட்டான் ஊராட்சி தூத்துக்குடி மாநகரை ஒட்டியுள்ள முக்கியமான ஊராட்சி ஆகும். இவை தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது, மாநகராட்சியுடன் மீளவிட்டான் ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மீளவிட்டான் ஊராட்சியின் தலைவராக சுதாகரின் தந்தை மற்றும் சகோதாரர் இருந்துள்ளனர். தூத்துக்குடியின் பாரம்பரியம்மிக்க குடும்பங்களில் ஒன்று தான் சுதாகரின் குடும்பம் ஆகும். ஆகவே, சுதாகருக்கு தொகுதியில் வேட்பாளர் அறிமுகவே தேவை இருக்காது. அப்படியான பின்னணி கொண்டவர் அவர்.


மேலும், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக சுதாகர் இருந்த காலகட்டத்தில், விளாத்திகுளம் தொகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்களுக்கு ரூபாய் 200 கோடிக்கு மேல் பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகை பெற்றுக் கொடுத்தது, விவசாயிகளுக்கு அதிக அளவு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கல், வாரா கடன் வசூலில் சாதனை, முதலீட்டு வளர்ச்சியை அதிகரித்தல், வங்கி மூலதனத்தை 900 கோடியில் இருந்து 1700 கோடி வரை அதிகரிக்க செய்தல்,  இந்த வங்கியின் வரலாற்றில் ரூபாய் 7.5 கோடிக்கு மேல் நிகர லாபம் ஈட்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை தன்னுடைய திறமையால் நிகழ்த்தி உள்ளார். அவரின் நிர்வாக திறமைக்கு அவர் கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த காலகட்டத்தில் வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சி என்கின்றனர் சுதாகரை பற்றி விவரம் அறிந்தவர்கள்.


தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளில் 50 க்கு மேற்பட்ட வட்டச்செயலாளர்கள், 6 பகுதி செயலாளர்கள் என கட்சியின் பெரும்பாண்மையானோர் மாவட்ட செயலாளர் சண்முகநாதனின் தீவிர விசுவாசிகளே. அதே போல் மாவட்ட செயலாளர் சண்முகநாதனின் படைதளபதிகளில் முதன்மையானவராகவும் சுதாகர் இருப்பதால் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக சுதாகர் தேர்வு செய்யப்படுவதற்கு மாவட்ட செயலாளரின் பரிபூரண ஆசியும், அவரை வெற்றிபெற வைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களும் ஆயத்தமாக இருப்பதால், தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் தேர்வில் சுதாகர் இருக்கும் பட்சத்தில், 2026 சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் தூத்துக்குடி தொகுதி இடம் பெறுவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

  • Share on

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபமா ? தூத்துக்குடி மக்களுக்கு காவல் துறை கொடுக்கும் எச்சரிக்கை!

அமமுகவில் இருந்து கடம்பூர் மாணிக்கராஜா நீக்கம் : டிடிவி தினகரன் அறிவிப்பு!

  • Share on