• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இதுவே முதல் முறை... பயணிகளுக்கு அடித்தது யோகம் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனின் அதிரடி 'ஏசி' கிப்ட்!

  • Share on

தூத்துக்குடியில் பொதுமக்களை  குளிரால் குளிரச்செய்த அமைச்சர் கீதாஜீவன் செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


அமைச்சர் கீதாஜீவனை பொறுத்தவரையில், தனது தந்தை மறைந்த என்.பெரியசாமி மூலம் அரசியலில் நுழைந்தாலும், தனது கடின உழைப்பால் திமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் தமிழக அரசில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் என்ற முக்கியப் பொறுப்பை வகித்து வருகிறார். 


பொதுமக்களுடன் எளிமையாகப் பழகுவதும், மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண்பதும் இவரை மக்களிடம் நெருக்கமானவராக மாற்றியுள்ளது. அதனால் தான், 2006-ல் முதல்முறையாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றதோடு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கீதாஜீவனை வெல்வது என்பது சாத்தியமற்றது என்ற சூழலை அவர் தற்போது உருவாக்கியுள்ளார். அவர் 2021 முதல் தற்போது வரை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.


தனது சொந்த தொகுதியான தூத்துக்குடியில் சாலை வசதி, குடிநீர் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதால், மக்களிடம் தனி கவனத்தை பெற்றுள்ளார் அமைச்சர் கீதாஜீவன்.


தனது தூத்துக்குடி தொகுதிக்கான வளர்ச்சியில் அக்கறை காட்டிவரும் கீதாஜீவன், தனது தொகுதியில் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட பயணிகள் பேருந்து நிழற்குடையை தற்போது திறந்து வைத்து, பொதுமக்களின் இதயங்களை குளிரச் செய்துள்ளார்.


தூத்துக்குடியில் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருச்செந்தூர் சாலை காமராஜ் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் புதிதாக திறக்கப்பட்ட இந்த குளிரூட்டப்பட்ட  பயணிகள் பேருந்து நிழற்குடையானது தற்போது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் திறக்கப்பட்ட முதல் குளிரூட்டப்பட்ட  பயணிகள் பேருந்து நிழற்குடை இது தான் என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

தூத்துக்குடியில் பிடிபட்ட சுமார் 1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் : 2 பேர் கைது!

மார்கண்டேயன் எம்எல்ஏவால் தலைகீழாக மாறிய விளாத்திகுளம் தொகுதி!

  • Share on