• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு : மகன் படுகாயம்!

  • Share on

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


தூத்துக்குடி மாவட்டம் திம்மராஜபுரம் தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (45). இவரது கணவர் இளையராஜா. தமிழரசி இன்று தனது மகன் மதனுடன் (21) சேர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து மீண்டும் தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.


இவர்களது வாகனம் வாகைகுளம் டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தாய் மற்றும் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.


அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழரசியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுகாயமடைந்த மதன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.


இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி., ஆட்சியருடன் சந்திப்பு!

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய இளம்பெண் : போலீஸ் விசாரணை!!

  • Share on