தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, அவர் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் மாற்றப்பட்டு, நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை மரியாதை நிமித்தாக நேரில் சந்தித்தார்.




