• vilasalnews@gmail.com

தலைமையிடம் விருப்பம்... தூத்துக்குடி தொகுதிக்கு காய் நகர்த்தும் அதிமுக முக்கிய புள்ளி!

  • Share on

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கிறது. 


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பலரும் தங்கள் பெயரில் ஒரு விருப்ப மனு தாக்கல் செய்வதுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.


இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக சார்பில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் தூத்துக்குடி  தொகுதியில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதனால் அதிமுகவிற்கான மதிப்பும் தூத்துக்குடியில் பெரும் அளவு சரிந்தது. ஆகவே, இந்த முறை வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக நேரடியாக களம் இறங்க வேண்டும் என தொகுதி அதிமுகவினர் விரும்புகின்றனர். 


ஆகவே, தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்ற சூழல் இருப்பதால், தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் விருப்ப மனு  அளித்து வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் தீவிர விசுவாசியாகவும், அவரின் தூத்துக்குடி முகமாகவும் அக்கட்சியினரிடையே அறியப்படுகிற, தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளரும், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதாகர், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்துள்ளார். அப்போது, தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம்,  இளைஞரணி துணைச் செயலாளர் டைகர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்கு மின்தடை!

அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on