• vilasalnews@gmail.com

கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களே... தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு!

  • Share on

அனைத்து கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து 2025 -26 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்திட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு என்னவென்றால், கிராம ஊராட்சியின் பகுதிகளிலுள்ள தங்களது வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242 இன் படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கு கிராம ஊராட்சிக்கு சொத்து வரியினை 31.05.2025-க்குள் செலுத்தியிருக்க வேண்டும்.


மேற்படி நாளதுவரை செலுத்தாதவர்கள் 15.12.2025 க்குள் தங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ அல்லது கணினி மையங்களிலோ தங்களின் வரி விதிப்பு எண்ணை சரிபார்த்து தவறாது இணையவழியில் ( https://vptax.tnrd.tn.gov.in/ ) செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கு உரிய கணினிவழி இரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், இவ்வாறே குடிநீர் கட்டணத்தை மாதாந்திரம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற அளவிலோ நிலுவையின்றி செலுத்திடவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் இளம்பகவத், தெரிவித்துள்ளார். 

  • Share on

திரிக்கப்படும் அழகுமுத்து கோன் பெயர்... வெடித்தது சர்ச்சை... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த யாதவர் சங்கம்!

அட்டகாசத்திற்கு முடிவே இல்லையா... கண்ணீர் வடிக்கும் விளாத்திகுளம் விவசாயிகள்!

  • Share on