தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.11.2025) பணி நியமன ஆணைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனை முனைய இயந்திரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வழங்கி, சிறந்த பள்ளிகள் என தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழ்களை பள்ளி ஆசிரியர்கள் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
காரைக்குடியில் 14.11.2025 அன்று நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகள் என தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி சாமுவேல்புரம், டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளி, டுவிபுரம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்ததைத்தொடர்ந்து, இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேடயம் மற்றும் சான்றிதழ்களை அப்பள்ளி ஆசிரியர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக பகுதி நேர நியாயவிலைக்கடைகளுக்கு தலா ரூ.29,000 மதிப்பில் என மொத்தம் ரூ. 67,86,000 மதிப்பீட்டில் 234 விற்பனை முனைய இயந்திரங்களை நியாய விலைகடைகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் 05 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் ( பொது )நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, ஆசிரியர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




