தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்புதுக்கோட்டை விஜயா தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (20.11.2025) தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா மற்றும் உறுப்பினர் செல்வேந்திரன் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் முன்னிலையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், RTE சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 2025- 2026-ம் கல்வியாண்டில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் குழந்தைகளின் நிலை, குழந்தைகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீள பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பெற்ற புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். தமிழ்நாடு விடுதிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட / பதிவு செய்யப்படாத விடுதிகள். குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகளின் பதிவு நிலை. குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகள் மற்றும் வழக்குகள், இளம் வயது கருத்தரிப்பு நிலை அறிக்கை, போதிய ஊட்டச்சத்து வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், குழந்தை நலக்குழுவில் மூன்று மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள், குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் காலாண்டு கூட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நிதி ஆதரவுத்திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் நிலை, குழந்தைகள் இல்லங்களின் பதிவு, தங்கியுள்ள குழந்தைகள் விபரம், போக்சோ வழக்கு நிலுவை, வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளின் நிலை மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098-க்கு வரப்பெற்ற அழைப்புகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு திபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி அனுசியா, மாவட்ட சுகாதார அலுவலர், தூத்துக்குடி யாழினி, திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் காயத்ரி, தொழிலாளர் துறை உதவி ஆணையர் மின்னல்கொடி, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் பிரிஜிட் செலஸ், இளைஞர் நிதிக்குழும உறுப்பினர் உமாதேவி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




