• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை... ஆரஞ்சு நிற எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மேலும், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-


தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் 15.10.2025 முதல் 17.10.2025 வரை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.


மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை : பழக்கடை உரிமையாளர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

  • Share on