• vilasalnews@gmail.com

மீண்டும் மானிய விலையில் உலர் சாம்பல் வழங்க வேண்டும் : பிளை ஆஷ் மூவ்வர் அசோசியேஷன் கோரிக்கை

  • Share on

மீண்டும் மானிய விலையில் உலர் சாம்பல் வழங்க வேண்டும் என்று பிளை ஆஷ் மூவ்வர் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது. 


தூத்துக்குடி பிளை ஆஷ் மூவ்வர் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.  உலர் சாம்பல் மூலம் செங்கல் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் 200க்கும் மேல் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 


2022-க்கு பின் மானிய விலையில் உலர் சாம்பல் கொடுப்பதை உலர் சாம்பல் உற்பத்தி நிறுவனங்கள் நிறுத்திவிட்டது. அதனால் இதை நம்பி வாழ்வோருக்கு ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மீண்டும் மானிய விலையில் டெண்டர் மூலம் உலர் சாம்பல் அனைவருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் சுதேஷ் ராஜ், பொருளாளர் தினகரன் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் வாலிபர் கொலை : நண்பர்கள் வெறிச்செயல்!

புனித வெள்ளியன்று மதுக் கடைகளை மூட வேண்டும் - ஆணையத் தலைவரிடம் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கோரிக்கை!

  • Share on