ஆகஸ்ட் 7 முத்தமிழறிஞர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அமைதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக - வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின் இந்த இயக்கத்தை கட்டி காத்து 5 முறை தமிழக முதல்வராக இருந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.
நவீன தமிழகத்தின் சிற்பி என போற்றப்படும் முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ், தமிழர் நலன், சமத்துவம், சமூக நீதி என்று பாடுபட்டவர். அவர் நம்மைவிட்டுச் சென்றாலும் அவர் காட்டிய வழியில் கொள்கையில் உறுதியோடு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இயக்கத்தை வழி நடத்தி வருகிறார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 7 வது நினைவு தினம் வருகிற ஆகஸ்ட் - 7 அன்று வருகிறது. அன்றைய தினம் காலை 7.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி V.V.D மெயின் ரோடு, டூவிபுரம் 5 வது தெரு - அண்ணா நகர் 7 வது தெரு சந்திப்பில் இருந்து மாவட்ட செயலாளராகிய ( P.கீதாஜீவன் ) என்னுடைய தலைமையில், 4 வது இரயில்வே கேட், குறிஞ்சி நகர் வழியாக ஊர்வலமாக சென்று மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அரங்கம் முன்பு அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோல தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக்கழகங்கள், வார்டுகள் தோறும் அவரது திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த கேட்டுக் கொள்கிறேன். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



