• vilasalnews@gmail.com

ஒருவரை தேட போய் இரண்டு பேர் பிணமாக வெளியே வந்த தூத்துக்குடி நடந்த திகில் சம்பவம்!

  • Share on

தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரையில் கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு சின்னதுரையின் என்பவரின்  வீட்டு கதவை சில இளைஞர்கள் தட்டியதால், அவரது மகன்களான மாரி பாண்டியன் மற்றும் பார்வை மாற்றுத்திறன் கொண்ட அருள்ராஜ் அந்த இளைஞர்களை கண்டித்துள்ளனர்.


இதனையடுத்து இவர்கள் 2 பேரும் சமீபத்தில் மாயமாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வ.உ.சி. துறைமுக சாலையில் தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டுகரையில் அவர்கள் 2 பேரும் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேர் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


தொடர்ந்து 2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அதாவது, மாரிபாண்டியனின் உறவினரான கோவில்பிள்ளை நகரை சேர்ந்த ரிதன் ( 25 ) என்பவரின் சகோதரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார். இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி ரிதன் மற்றும் அவரது கூட்டாளிகளான முனீஸ்வரன், முகமது மீரான், சங்கர் மற்றும் ஒரு இளஞ்சிறார் உள்ளிட்டோர் சேர்ந்து மாரிபாண்டி மற்றும் அவரது சகோதரர் அருள்ராஜ் ஆகிய இருவரையும் கம்பு, கல்லால் தாக்கி உப்பாற்று ஓடைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு வைத்து 2 பேரையும் சரமாரி தாக்கியதில் அவர்கள் இறந்தனர். தொடர்ந்து அவர்கள் உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து அவர்கள் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் கூடுதலாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மணியகாரன்பட்டி விஜயகுமார் சந்திப்பு!

அதிமுக அரசு அமைந்ததும்... தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த உறுதி!

  • Share on