• vilasalnews@gmail.com

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மணியகாரன்பட்டி விஜயகுமார் சந்திப்பு!

  • Share on

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


பின்னர், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இரவு 10.15 மணி அளவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து நேற்று ( ஆக.,1 ) காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம், தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.


பின்னர் மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி பிரதான சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து பயணியர் விடுதி முன்பு வரை ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து பயணியர் விடுதி முன்பு பிரச்சாரக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.


அதனையடுத்து, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று ( ஆக.,2 ) காலை உப்பு உற்பத்தியாளர்கள், நிறுவனத்தார், கப்பல் தொழிலளார்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். 


இந்தநிலையில், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு பிரச்சாரப் பயணத்துக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில், விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் வழிகாட்டுதல் படி, புதூர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், கம்பத்துப்பட்டி  கூட்டுறவு சங்க தலைவருமான மணியகாரன்பட்டி விஜயகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

  • Share on

கடலில் மூழ்கிய படகு... உதவி கரம் நீட்டிய அஜிதா ஆக்னல் தலைமையிலான தவெகவினர்!

ஒருவரை தேட போய் இரண்டு பேர் பிணமாக வெளியே வந்த தூத்துக்குடி நடந்த திகில் சம்பவம்!

  • Share on