• vilasalnews@gmail.com

தூத்துக்குடி புறப்படும் முதல்வர் ஸ்டாலின் ... வெளியான முக்கிய அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடியில் தயாராகி உள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற் சாலையையும் அதன் விற்பனையையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.


உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.


அதைத் தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 


இதில் முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 3 ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

  • Share on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு பணியில் தீவிரம் காட்டும் முனியசக்தி இராமச்சந்திரன்!

வாட்ஸ்அப் காலில் தொடர்பு... தூத்துக்குடி மூதாட்டியிடம் 50 லட்சம் பணம் பறித்த 3 பேர் கைது!

  • Share on