தூத்துக்குடி விஸ்வகர்ம தர்ம பரிபாலன சங்கத்தின் மகாசபை கூட்டம் 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் சண்முகசங்கர் தலைமை தாங்கினார், செயலாளர் சசிகுமார் ஆண்டு அறிக்கை வாசித்து மகாசபை கூட்டத்தில் உறுப்பினர்களிடம் ஏக மனதாக ஒப்புதல் பெறப்பட்டது,
அதனை தெடர்ந்து பால விநாயகர் கோவில்தெருவில் இருக்கும் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வணிக வளாகத்தில் மேல்மாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்டது,
இதனை தெடர்ந்து பொருளாளர் தளவாய்பாண்டியன் மற்றும், உதவி தலைவர் சுடலையாண்டி (எ) ரத்தினம் ஆகிய இருவரின் பொறுப்புக்கு பதிலாக செயற்குழு உறுப்பினர் கார்த்தீசன் சங்கத்தின் புதிய பொருளாளராகவும், வெங்கடேசன் உதவி தலைவராகவும் மகாசபை உறுப்பினர்கள் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர் இருவரும் முறையாக பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ராஜகோபால் நன்றி உரையாற்றினார்.
மேலும், மாலை சங்க அலுவலகத்தில் வைத்து 2024-2025 ம் ஆண்டின் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலைவாணி கல்வி பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் தகுதி பெற்ற மாணவ மாணவியர்க்கு சங்கத்தின் பொறுப்பாளர்கள் பரிசுகள் வழங்கினார்கள். அதனை தெடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்ட்ரென்த் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ரா.பீரீத்தி சிவ பிச்சம்மாள் பங்கேற்று, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.அவருக்கு சங்கத்தின் சார்பாக தலைவர் சண்முக சங்கர் பரிசு வழங்கி கௌரவித்தார். மேலும், மாணவி ரா.பீரீத்தி சிவ பிச்சம்மாள் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஊருக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்திய திருநாட்டிற்கும் பெருமைகள் பல சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார்.



