• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஜூலை 31ல் மதிமுக நிர்வாகிகள் கூட்டம்!

  • Share on

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக., 9 முதல் ஆக.,19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.


இந்த நிலையில், தூத்துக்குடியில் வருகிற ஆக., 9ஆம் தேதி பிரசாரப் பயணத்தை தொடங்கும் வைகோ  ‘ஸ்டொ்லைட் வெளியேற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளது தொடர்பாகவும், செப்டம்பர் 15 ல் திருச்சியில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மதிமுக மாநில மாநாடு ஏற்பாடுகள் மற்றும் கட்சி ஆக்க பணிகள் தொடர்பான தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 31.7. 2025 வியாழக்கிழமை பிற்பகல் 4:45 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்ற வளாகம் எதிர்ப்புறம் உள்ள கனி பேலஸ் மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.


இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்குகிறார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மேலும், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுகவினர் பலர் கலந்து கொள்கின்றனர் என தூத்துக்குடி மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளராக களம் இறங்குகிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ்? உண்மை நிலவரம் என்ன?

தூத்துக்குடி மென்பொறியாளர் ஆணவக் கொலை : அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்!

  • Share on