• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட மழை அதிகம் இருக்கும் - வானிலை ஆய்வாளர்கள் தகவல்!

  • Share on

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்டு மாதம் முதல் மழைப்பொழிவு மெல்ல அதிகரித்து தீவிரமடையும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் வட மாநிலங்களிலும், அரபிக்கடலோர மாநிலங்களும் கனமழையை பெய்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைப்பொழிவை பெற்றுள்ளது.


இந்த மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவிய நிலையில், அடுத்த மாதம் ( ஆகஸ்டு )  இயல்பை விட அதிக மழைப் பொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர் . அதன்படி, முதல் 2 வாரங்களில் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும். ஆகஸ்டு 3 முதல் 15 வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.


ஆகஸ்டு 18 முதல் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

காதலில் உணர்ச்சித் தீவிரம்... தூத்துக்குடியில் பரிமாறப்பட்ட சங்க இலக்கிய காதல்!

தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சங்கம்!

  • Share on