கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் புணரமைக்கப்பட்ட 2 புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, வழங்கறிஞர் சங்கத்தின் தலைவர் சங்கர்கணேஷ் தலைமை வகித்தார். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
சார்பு நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையில் நீதிபதி கருப்பசாமி, ஜேஎம்-1 நீதிபதி ஆனந்த், ஜேஎம்-2 நீதிபதி மணிமேகலை, பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, செயலாளர் ஜெயசீலன், துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச்செயலாளர் முனீஸ்வரி, பொருளாளர் ரேவதி, வழங்கறிஞர்கள் போஸ், ரெங்கராஜன், மணிகண்டன், ஆழ்வார்சாமி, சிவக்குமார், ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், முத்துச்சாமி, சந்திரசேகரன், கார்த்திக், சக்திவேல்,ராஜேஸ், சந்திரன்,பாரதி, ராஜ்மோகன், பெஞ்சமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




