• vilasalnews@gmail.com

இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!

  • Share on

இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில்  2025-26 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் 'முதல் கூட்டம்' நடைபெற்றது.


கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கீதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இராஜலட்சுமி  முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களைப் பெற்றோர் செயலியில்  வருகையைப் பதிவு செய்த பின்னர்  ஆசிரியர் இந்திரா  வரவேற்புரை நிகழ்த்தினார்.


மாநில கற்றல் அடைவு SLAS மற்றும் திறன் மேலாண்மை பங்கு பற்றிப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பது மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகள் சத்தமாக வாசிக்க 10 -15 நிமிடங்கள் பெற்றோர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் குறித்து தலைமையாசிரியர் இப்ராஹிம்  விளக்கிக் கூறினார்.


மேற்காணும் கூட்டப் பொருள் சார்ந்து ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளைப் பின்பற்றி விவாதித்துப் பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மேற்காண் பொருள் சார்ந்து அனைத்துச் செயல்பாடுகளுக்கும்  ஒத்துழைப்பு  அளிப்பதாக ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


இறுதியாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களைச் செயலியின் உரிய பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆசிரியர் பிரதிநிதி பாக்கியம் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகை... வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள்!

வழக்கறிஞர் சங்கத்தின் 2 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!

  • Share on