தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேர்வைகாரன்மடம் கிராம ஊராட்சியானது, சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், காமராஜ்நகர், செந்தியம்பலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகவும்.
இந்த சேர்வைகாரன்மடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டப்பட்ட சாலை இருந்த நிலையில், தற்போது அங்கே புதிய சாலை அமைத்து கொடுத்தல் தொடங்கி, மாற்று வழி மின்வழிதடப் பாதை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கூடுதல் மின்மாற்றி, புதிய மின்மாற்றி, புதிய நியாய விலை கடை என பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்ததோடு,
கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வரை மக்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளை எங்கள் சேர்வைகாரன்மடம் கிராம ஊராட்சிக்கு செய்து கொடுத்து வரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு எங்களது பகுதி மக்கள் சார்பாக நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என சேர்வைகாரன்மடம் கிராம ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஜெபஸ்டின் மற்றும் பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்



