• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வாய்ப்பு இது!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC. TNJISRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 595 காலிப் பணியிடங்களுக்கு TNPSC Group-II & II-A  முதல்நிலை தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வானது வரும் 28.09.2025 அன்று நடைபெறும். 


இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 13.08.2025. இந்த தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 25.07.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு துவங்கப்படவுள்ளது.


இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Thoothukudi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


மேலும் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC Group-II & II-A  முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.


  • Share on

மருமகனை தாக்கி கொலை மிரட்டல் : மாமனார் கைது

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா...முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

  • Share on