• vilasalnews@gmail.com

குரூப் - 4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறியதால் அதிர்ச்சி அடைந்த தூத்துக்குடி பெண்... கலெக்டர்; டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு புகார்!

  • Share on

குரூப்-4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறி இருந்ததால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி விதவை பெண் தூத்துக்குடி கலெக்டர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி, தலைமையகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளுக்கான தொகுதி - 4 தேர்வு கடந்த ஜூலை 12ல் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.


மேலும், இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுகள் எழுதினர். குரூப் 4 தேர்வு மையங்களான எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களுக்கு சென்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.


தேர்வினை கண்காணிப்பதற்காக 31 நடமாடும் குழுக்களும், 14 பறக்கும் படை குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு அறையில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. 


இந்த நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த செல்வி ( 48 ) என்பவர், 12 ஆம் தேதி நடந்த குரூப் - 4 தேர்வை எழுதினார். காமராஜ் கல்லூரி மையத்தில் அவர் தேர்வு எழுதிய போது, ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது வினாத்தாளில் பக்கங்கள் மாறி இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.


இது தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு கண்காணிப்பாளரிடம் செல்வி புகார் அளித்தார். அவர்கள் கூடுதலாக 15 நிமிடம் அவருக்கு ஒதுக்கி தேர்வு எழுத வைத்தனர்.


மேலும், இது தொடர்பாக, துாத்துக்குடி கலெக்டர் மற்றும் டி.என்.பி.எஸ்.,சி., தலைமை அலுவலகத்திற்கு அவர் புகார் மனு அனுப்பி உள்ளார்.

  • Share on

மனைவியுடன் இருந்த தூத்துக்குடி ரவுடி கதையை முடித்த கும்பல்!

மருமகனை தாக்கி கொலை மிரட்டல் : மாமனார் கைது

  • Share on