• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12ல் 127 மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று (10.07.2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடத்தப்படும் தொகுதி - IV தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. 


தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளுக்கான தொகுதி - IV தேர்வு வருகின்ற ஜீலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்குட்ப்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. 


மேலும், இத்தேர்விற்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37005 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வினை கண்காணிப்பதற்காக 31 நடமாடும் குழுக்களும், 14 பறக்கும் படை குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அறையில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு வசதிகளையும் ஏற்படுத்துவது குறித்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

நாளை வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா... இன்று எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

  • Share on