• vilasalnews@gmail.com

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3 தீர்ப்பு அளித்துள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயகொடி மகன் வேல்மணி (40/25) மற்றும் சதாசிவம் மகன் பாரதிகுமார் (27/25) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3 ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் இன்று (10.07.2025) குற்றவாளிகளான வேல்மணி மற்றும் பாரதிகுமார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடியில் இன்று மின்தடை!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12ல் 127 மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

  • Share on