திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு திருவிழாவினை முன்னிட்டு வருகிற ஜூலை 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா 07.07.2025 அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளதால். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி. கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும், 07.07.2025 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 அன்று மூன்றாம் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா 07.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தூத்துக்குடி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.




