தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி நிர்வாகியின் திருமணத்தில் கலந்து கொள்ள வருகை தரும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் க்கு உற்சாக வரவேற்பு அளிக்க தூத்துக்குடி மாவட்ட முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தூத்துக்குடி முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் நிர்வாகி கோபாலகிருஷ்ணன் - கௌசல்யா ஆகியோரது திருமணம் நாளை ( ஜூலை 2 ) தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9 வது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவை முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் தலைமை தாங்கி நடத்தி வைக்க இருக்கிறார்.
இதனையடுத்து, தூத்துக்குடிக்கு நாளை ( ஜூலை 2 ) வருகை தரும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் க்கு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க தூத்துக்குடி மாவட்ட முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.



