எட்டயபுரம் பாரதியார் இல்லத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எட்டயபுரம் பாரதியார் இல்லம் கடந்த சில மாதங்களுக்கு முன் முன்கூரை இடிந்து விழுந்த நிலையில் தமிழக அரசு இதுநாள் வரையும் எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யாமல் கலாம் தாழ்த்தி வருகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் மணி மண்டபத்திற்கு இந்த நிலைமையா? இந்த நிலமை மன வேதனை அளிக்கிறது. எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மண்டபத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



