• vilasalnews@gmail.com

இவரிடம் சொன்னா நடக்கும்... மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் எம்எல்ஏ!

  • Share on

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தந்ததிற்காக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு செக்காரக்குடி கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சி பெருமாள் கோவில் வடபுறம் மயானம் செல்லும் பாதையில் மின் கம்பம் ஒன்று நடுத்தெருவில் நின்றது.


கடந்த 21.06.2025 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  செக்காரக்குடிக்கு வருகை தந்த போது இந்த பிரச்சினை குறித்து, ஹோட்டல் மணி மகன் சுப்பையா என்பவர் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


மேலும், அந்த சாலையானது மயானத்திற்கு செல்லும் வழி என்பதால் மயான வண்டி கூட செல்ல முடியாமல் உள்ளது என ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கவனத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலெட்சுமி அய்யம்பெருமாள்  முன்னிலையில் பொதுமக்கள் எடுத்து சொன்னார்கள்.


இதனையடுத்து, உடனடியாக மின் கம்பத்தை  மாற்றி தர மின் வாரிய அலுவலர்களுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ உத்தரவிட்டார். இதனையடுத்து  24.06.2025 அன்று  நடுத்தெருவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி தெருவின் ஓரமாக நடப்பட்டது.


இதனைத்தொடர்ந்து, மக்கள் பணியில் சிறிதும் தாமதம் இன்றி பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார் தொகுதி எம்எல்ஏ என்று பெருமை தெரிவித்ததோடு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு செக்காரக்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே அதிமுக பிரமுகர் மரணம் : திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி!

எட்டயபுரம் பாரதியாருக்காக தூத்துக்குடி ஆட்சியரிடம் இந்து முன்னணி வைத்த கோரிக்கை!

  • Share on