• vilasalnews@gmail.com

ஓணமாக்குளம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் : அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ சண்முகையா!

  • Share on

ஓணமாக்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வீரபாண்டியபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி மற்றும் வீரபாண்டியபுரம் கிராமத்தில் ரூ.4.60 மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் கண்ணன், ஒப்பந்தகாரர் முகமது, கிளை செயலாளர்கள் அறிவழகன், யேசுராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மாரிராகுல், இளைஞரணி மகாராஜன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஏலத்திற்கு வருகிறது பழைய பேப்பர்!

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்!

  • Share on