• vilasalnews@gmail.com

சுமார் 15 லட்சம்... தூத்துக்குடியில் தவெக மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்!

  • Share on

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னல் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு மாநில அளவில் தவெகவினரிடையே பேசுபொருளாகி உள்ளது.


பெற்றோர்களை இழந்து ஏழ்மை நிலையில் இருந்த, 5 குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஏற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 5 குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்திற்கானத் தொகையை வழங்கியது.




TVK Mini Cricket Tournament நடத்தி வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தருவைகுளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போடியில் தளபதி உருவம் பொறித்த T-shirt வழங்கப்பட்டது.


முத்தையாபுரத்தில் மாபெரும் கபடி போட்டி நடத்தி வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மும்மத வழிபாட்டில் ஈடுபட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.


நரிக்குறவர் சமுதாய மக்கள், துப்புரவுப் பணியாளர்கள், பனைத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர்க்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கியது. உப்பளத் தொழிலாளர்களுக்கு, காலை உணவு வழங்கியது. 6 குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் வழங்கியது.




போல்பேட்டை அங்கன்வாடி மையத்திற்கு தேவையானப் பொருட்கள் வழங்கியது. தருவைக்குளம் பகுதியில், இரண்டு பள்ளிகளில் சுமார் 950 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தது.


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள பெண்களுக்கு, போர்வை மற்றும் பழங்கள் வழங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வாசல் முன்பு காலை உணவு வழங்கியது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கியது.




லெவஞ்சிபுரம் பகுதியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் வழங்கியது. முத்தையாபுரம் பகுதியில் சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கியது.


லூர்த்தம்மாள்புரம் பகுதியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைச் சாமான்கள் வழங்கியது. S.S மாணிக்கப்புரம் பகுதியில், சுமார் 1000 பயனாளிகளுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.




தூத்துக்குடி மாநகராட்சி 1 முதல் 60 வார்டுகளிலும், தளபதியார் பிறந்தநாளில், ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னல் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதும், பிறந்தநாள் கொண்டாட செலவுகளும் மாநில அளவில் தவெகவினரிடையே பேசுபொருளாகி உள்ளது.


தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னலின் இது போன்ற அரசியல் செயல்பாடுகளே, மாவட்டம் மட்டுமல்லாது மாநில அளவிலும் அரசியல் செயல்பாட்டாளர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர்... யார் இந்த பானோத் ம்ருகேந்தர் லால்?

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

  • Share on