• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கிலோ கணக்கில் சிக்கிய கஞ்சா...3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த  3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிரீந்து 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்  ஜான் உத்தரவின்படி  தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) யேசுராஜசேகரன், சார்பு ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் இன்று (18.06.2025) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (எ) டியோ முருகன் (27), ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜா (எ) கோபி (23) மற்றும் பூபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சடைமாரியப்பன் (23) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனடியாக மேற்படி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை மின் தடை : இதோ இந்த ஏரியாக்கள் தான்!

செக்காரக்குடி கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் பள்ளம்!

  • Share on