• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் செயற்கை புல்தரையுடன் புதிய விளையாட்டு மைதானம்!

  • Share on

தூத்துக்குடி பாளைரோட்டில் கைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் வகையில் செயற்கை புல்தரை ( டர்ப் - Turf )  கொண்ட புதிய விளையாட்டு மைதானத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் விளையாட்டு மைதானங்களை உருவாக்குவது, பழைய விளையாட்டு மைதானங்களை புதுப்பொலிவுபெறச் செய்வது என விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத்தையும், ஆதரவையும் தூத்துக்குடி மாநகராட்சி கொடுத்து வருகிறது.


அந்த வகையில், தூத்துக்குடி -  பாளையங்கோட்டை ரோட்டில் வ.உ.சி கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி இடத்தில் இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் கைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் வகையில் செயற்கை புல்தரை ( டர்ப் - Turf )  கொண்ட புதிய விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

குடும்ப அட்டையில் சிக்கலா? இதோ தீர்க்க வழி!

தூத்துக்குடியில் வாட்ஸ்அப் லிங் மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி : 2 பேர் கைது!

  • Share on