தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அருகில் புதிதாக கைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து விளையாட்டுகளுக்கான செயற்கை புல்தரை ( டர்ப் - Turf ) கொண்ட மைதானம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலில் வாழ்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு ஆரோக்கியமான உடல் மனதை மேலும் ஆரோக்கியமாக்குகிறது. மேலும், எந்தவொரு மாணவரும், இளைஞரும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முழுமை பெற விளையாட்டு ஒரு முக்கிய காரணியாகும். ஆகவே தான், தூத்துக்குடி மாநகரில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும், விளையாட்டு வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காகவும், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி எடுத்து வரும் நடவடிக்கைகள் மாநகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் விளையாட்டு மைதானங்களை உருவாக்குவது, தூத்துக்குடி மீனாட்சிபுரம் ஸ்மாட் சிட்டி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பழைய விளையாட்டு மைதானத்தை மீட்டு, புதுப்பொலிவுடன் உருவாக்குவது என விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத்தையும், ஆதரவையும் கொடுத்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமி,
தூத்துக்குடி - பாளையங்கோட்டை ரோட்டில் வ.உ.சி கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி இடத்தில் இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் கைப்பந்து, இறகுப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுகளுக்கான செயற்கை புல்தரை ( டர்ப் - Turf ) கொண்ட புதிய மைதானத்தை மாநகராட்சி சார்பில் அமைத்துள்ளார்.
இந்த புதிய மைதானம் கனிமொழி கருணாநிதி எம்பியால் இன்று ( 12.6.25 ) மாலை திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.



