• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் முருக பக்தர்களுக்கு உணவு : தவெக அஜிதா ஆக்னல் வழங்கினார்!

  • Share on

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நேற்று ( 9.6.25 ) சென்ற பக்தர்களுக்கு, தூத்துக்குடியில், தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். 


வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான், முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது. இதனால் இந்த நாள் முருகனின் பிறந்தநாள் ஆகிறது. 


"விசாகன் என்றால் "குமரன், இளைஞன் என்ற பொருள்கள் உண்டு. முருகன் என்றும் இளையவன் என்பதால், விசாகம் நட்சத்திரம் அவருக்குரியது ஆயிற்று. பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகனிடத்தில் காணலாம்.


வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். ஆகவே, வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் லட்சகணக்கானோர் பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.


அந்தவகையில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நேற்று ( 9.6.25 ) சென்ற பக்தர்களுக்கு, தூத்துக்குடியில், தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டது ஏன்?

2 ஆண்டுளுக்கு மேலாக தீர்வின்றி இருந்த கொலை வழக்கு விவகாரம்... தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு!

  • Share on