• vilasalnews@gmail.com

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... காட்டுநாயக்கன்பட்டி பள்ளி!

  • Share on

காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் மீண்டும் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள நடராஜன் மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த 50 மாணவ - மாணவியர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த 25 ஆசிரியர்கள் என அனைவரும் 31 வருடங்கள் கடந்து தாங்கள் பயின்ற பள்ளியில் ஆசிரியர்கள் - மாணவர்கள் சங்கம விழா நடத்தி, குடும்ப உறுப்பினர்களோடு சங்கமித்து மகிழ்ந்தனர்.


மறைந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நினைவேந்தல் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், ஓவியப்போட்டி, நடனப்போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கலகலப்பாக நடைபெற்றது. விழாவில் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

  • Share on

ஓட்டப்பிடாரத்தில் புதிய கலை, அறிவியல் கல்லூரி திறப்பு!

எம்எல்ஏவிற்கு புகழாரம் சூட்டிய தூத்துக்குடி கலெக்டர்!

  • Share on