• vilasalnews@gmail.com

கருவில் உயிரிழந்த குழந்தை வெளியேற்றுவது எப்படி? தூத்துக்குடி அரசு மருத்துவர் விளக்கம்!

  • Share on

கருவில் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், தாயின் உடல் நிலையை பாதிக்காமல் வெளியேற்றதுவதே முதன்மை குறிக்கோள் என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி விளக்கம் அளித்துள்ளார்.


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இறந்த நிலையில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாக  குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,


இது குறித்து உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-


கருவில் வளரும் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாயின் உடல் நலத்தை பாதிக்காமல், இயற்கையான பிரசவத்தின் மூலம் குழந்தையை வெளியேற்றுவதே முதன்மை குறிக்கோளாகும். முதலில், அந்த குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான சூழ்நிலைகள் மற்றும் கருப்பையின் வளர்ச்சி காலம் போன்றவை அறியப்படும். 


பின்பு, தாயின் உடல் நிலைச் சோதனைகள் குறிப்பாக, இரத்தம் உறைவதற்கான பரிசோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்படும். தாயின் நிலைமை நிலைத்திருக்கும் போது, சீரான முறையில் இயற்கை பிரசவம் செய்யப்படும். சிசேரியன் முறையை மிகுந்த அவசியம் உள்ள போது மட்டுமே மேற்கொள்வது நெறிமுறை. எந்த சூழ்நிலையிலும், தாயின் உடல் நலம் முக்கியமாக கருதப்படும் அதனை பாதிக்காமல் குழந்தையை வெளியேற்றும் வழி தான் பின்பற்றப்படும்.


இந்நிலையில், பிரசவத்தை தூண்டும் (Induction of Labor) சில மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகின்றன:


1. (Foley catheter) கருப்பையின் வாயில் (cervix) இடுவதன் மூலம், அதை விரிவடையச் செய்து பிரசவத்தை தூண்டும் முறை.


2. foley catheter விழுந்த பின் -இதன் கால அளவு 12 முதல் 24 மணி நேரம் வரை ஆகும் ‌.‌PGE2 Gel லை கருப்பையின் வாயில் இடுவதன் மூலம் பிரசவம் துவங்கச் செய்யப்படுகிறது. அல்லது 28 வாரங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் – Misoprostol மாத்திரைகள் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை வைக்கப்படும்


இந்த முறைகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களின் கவனிப்பில், தாயின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அவசர சிசேரியன் (LSCS) பெரும்பாலும் மேற்கொள்ளப்படாது, மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். 

  • Share on

தூத்துக்குடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது... போலீஸ் ஜீப் முன் படுத்து உறவினர்கள் மறியல்!

தூத்துக்குடியில் அரசு கல்லூரிகளில் சேர காத்திருக்கும் மாணவர்களா நீங்கள்? இதை தெரிஞ்சிக்கோங்க!

  • Share on