• vilasalnews@gmail.com

காருக்குள் கருகிய நிலையில் சடலம்... தூத்துக்குடி அருகே பரபரப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம்கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே போலீஸ் துப்பாக்கி சுடுதளம் உள்ளது. இதன் அருகே உள்ள தனியார் குடில் அருகே சாலையோரத்தில் முழுவதும் எரிந்த நிலையில் கார் ஒன்று நிற்பதாக உள்ளூர் மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து, முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, எரிந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காருக்குள் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுத்தனர்.


பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்யத் தொடங்கினர். கார் யாருடையது? காரில் எரிந்த நிலையில் இருப்பவர் யார் என்றும் விசாரித்து வரும் காவல்துறையினர் இது தற்கொலையா? கொலையா? அல்லது விபத்து என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

பரபரக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதி... என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்!

தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு... பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

  • Share on