• vilasalnews@gmail.com

பரபரக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதி... என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்!

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதியாக ஓட்டப்பிடாரம் விளங்குகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது . தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில வார்டுகள், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வைகாரன்மடம், அய்யனடைப்பு, குலையன்கரிசல், குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட செக்காரக்குடி, வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, முறப்பநாடு, வல்லநாடு, வசவப்பபுரம், நாணல்காடு, மணக்கரை, முத்தாலங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியது தான் ஓட்டப்பிடாரம் தொகுதி.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம் ஆகும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இத்தொகுதியில் அதிகளவில் இருப்பதால் இந்த தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இது பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதியாகவும் விளங்கி வருகிறது.


இங்கு பெரிய அளவில் நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால் மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. இந்த தொகுதியில் அமைந்து உள்ள புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி அதிக அளவு நடந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த உற்பத்தி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் பகுதியில் மீனவர்கள் அதிகம் உள்ளனர். இந்த தொகுதியில் தற்போது மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாக்காளர்கள் உள்ளனர். 


ஓட்டப்பிடாரம் தொகுதி தொடக்கத்தில் பொது தொகுதியாக இருந்தது. அப்போது 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1967 ஆம் ஆண்டு கடம்பூர் தொகுதி நீக்கப்பட்டு பெரும்பான்மையான பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேர்க்கப்பட்டதால் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது.


இந்த தொகுதி 1962 முதல் இதுவரை 15 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இதில் 3 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை அதிமுக வும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்று உள்ளது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, ஜனதா கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டவை தலா ஒருமுறை வெற்றி பெற்று உள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றார்.


பின்னர், 2021 தேர்தலில் திமுக தலைமை சண்முகையாவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கவே, 73,110 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மோகனை விட 8,510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா் சண்முகையா.


கால் நூற்றாண்டுகளாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்எல்ஏவாக கால் ஊன்ற முடியாமல் இருந்த திமுகவை, 2019 இடைத்தேர்தல், 2021 பொதுத் தேர்தல் என தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தொகுதியை திமுக வசம் ஆக்கிய பெருமை சண்முகையாவையே சேரும் என்கின்றனர் உள்ளூர் திமுகவினர். மேலும், சண்முகையா தேர்தல் களத்தில் நிற்கும் வரை ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றி என்பது எதிர்கட்சிகளுக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்கின்றனர் சண்முகையா எம்எல்ஏவின் பலம் அறிந்தவர்கள்.


கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக வசம் இருந்த தொகுதியை உடைத்து நொறுக்கி, தற்போது திமுகவின் எஃகு கோட்டையாக மாற்றிய வரலாற்று அரசியல் சாதனைக்கு சொந்தகாரரான சண்முகையாவை, தேர்தல் களத்தில் வீழ்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை உணர்ந்த எதிர்கட்சிகள், தற்போது எங்களது சொந்த கட்சியில் உள்ள சில புல்லுருவிகளை வைத்துக்கொண்டு, சண்முகையா எம்எல்ஏவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில அவதூறுகளை சமீபகாலமாக பரப்பி வருகின்றனர்.


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே, பல நூறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த, திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளனர்.


இந்த விக்னேஷ் என்பவர், ஓட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்தச் சிலை கடத்தலில், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  


ஆனால்,  திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இந்த சிலை கடத்தல் வழக்கில், திரு.சண்முகையா இதுவரை விசாரணை‌க்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரியவருகிறது. 


யாராக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி,  உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.  என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களும் உள்ளது. இது போல கொலை உள்ளிட்ட குற்றவழக்கு பிண்ணனி கொண்டவர்களும் அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டிய போட்டக்களும் உள்ளது. அதற்காக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நானும் உடந்தைதான் என்று சொல்வாரா? அல்லது வேறு யாராவது சொன்னால் தான் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? 


ஒரு வழக்கில் தொகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர் சம்மந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டதை வைத்து, அந்த தொகுதி எம்எல்ஏவிற்கும் தொடர்பு என கூறுவது எவ்வளவு அபத்தம். இது அறியாமையின் வெளிப்பாடே இன்றி வேறு என்ன சொல்வது? 


அரசியல் களத்தில் நேரடியாக எம்எல்ஏ சண்முகையாவை எதிர்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகளும், சில சொந்த கட்சி புல்லுருவிகளும் சண்முகையாவிற்கு எதிராக  அவச்சொல்லை பொதுவெளியில் விதைத்து வருகிறார்கள். ஆனால், அது மண்ணோடு மண்ணாக மக்கி போகும் என அந்த மடையர்களுக்கு தெரியாது என வெடித்துச் சிதறுகின்றனர் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுகவினர்.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களத்திற்கு ஓராண்டுகள் இருக்கும் நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இப்பொழுதே அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது அரசியல் களம்.

  • Share on

ஒரே நாளில் தூத்துக்குடி கலெக்டருக்கு வந்த 437 மனுக்கள்!

காருக்குள் கருகிய நிலையில் சடலம்... தூத்துக்குடி அருகே பரபரப்பு!

  • Share on